(நா.தனுஜா)
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கொங்றீட் அடக்கஸ்தலங்களில் புதைக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். மாலைதீவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகிறார். தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை வரவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் இறுதித் தீர்வு என்ன என்பதை அரசாங்கம் ஒருமித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆகவே அரசாங்கம் இது குறித்த இறுதித் தீர்மானத்தை அறிவித்து, வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment