(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதா ? அல்லது அடக்கம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுப்பது மதங்களுக்கு பொறுப்பானதல்ல என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சுகாதார குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவது முறையற்றதாகும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் மரணங்களுக்கு என்ன செய்வது என்று மத தலைவர்களிடம் வினவுவது பயனற்றது. அத்துடன் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் வினவுவதும் பயனற்றது.
கொவிட்-19 வைரஸ் தாக்கம் தொடர்பான தீர்மானத்தை சுகாதார குழு ஊடாக அரசாங்கமே எடுக்க வேண்டும். கொவிட்-19 வைரஸ் தாக்கம் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்கள் தற்போது பல தரப்பட்டதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டு செயற்பாடுகளை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இனங்களுக்கு சாதகமாக தற்போது செயற்படுவது மாறுப்பட்ட விளைவினை ஏற்படுத்தும் என்றார்.
No comments:
Post a Comment