ஓட்டப்பந்தயம் நடாத்தியவருக்கு 90 ஆயிரம் ரூபா தண்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

ஓட்டப்பந்தயம் நடாத்தியவருக்கு 90 ஆயிரம் ரூபா தண்டம்

(எம்.மனோசித்ரா) 

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் நடத்திய சந்தேக நபருக்கு 90 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மூலப்பிரதியை மாற்றியமை, இலக்க தகடு இல்லாது உரிய வாகன அனுமதிப் பத்திரம் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை ஆகிய குற்றங்களை குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஏற்றுக் கொண்ட நிலையில் கம்பஹா மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எம். மஹேந்திர ராஜா இந்தி உத்தரவை பிறப்பித்தார்.

கடவத்தை பகுதியில் வசிக்கும் மோட்டார் சைக்கிள் ஒட்டுநருக்கே இவ்வாறு தண்டப் பணம் விதிக்கப்பட்டது.

சம்பவ தினம் கடவத்தை அதிவேக வீதி உட்பிரவேசிக்கும் பகுதியிலிருந்து யக்கலை - கந்தகபாபு சந்தி வரையில் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டி பந்தயம் இடம்பெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இவ்வாறு பந்தயம் நடத்தக் கூடாது என எச்சரித்தும் கருத்தில் கொள்ளப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment