ஜனவரி 31ஆம் திகதி வரை சிவனொளிபாதமலை செல்ல அனுமதியில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

ஜனவரி 31ஆம் திகதி வரை சிவனொளிபாதமலை செல்ல அனுமதியில்லை

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை சிவனொளிபாதமலையில் வழிபாடுகளுக்கு அனுமதியளிக்கப்படாதென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுனர் செயலகத்தில் வாராந்தம் நடைபெறும் கொவிட் ஒழிப்பு தொடர்பிலான கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

“எதிர்வரும் 29ஆம் திகதி வரும் பொசன் பௌர்னமி தினத்துடன் இவ்வருடத்திற்கான சிவனொலிபாதமலை புனித யாத்திரை ஆரம்பமாகிறது. 

இலட்சக்கணக்கானவர்கள் சிவனொலிபாதமலை யாத்திரிரைக்கு வருவது வழமையாகும். நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்” மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment