ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக உலக முஸ்லிம் லீக்கினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர் எங்கே? : ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார் விஜேதாச ராஜபக்ஷ் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக உலக முஸ்லிம் லீக்கினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர் எங்கே? : ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார் விஜேதாச ராஜபக்ஷ்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிந்தளிப்பதற்காக உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2019 ஜூலை மாதம் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் சமாதான சம்மேளனம் மாநாடு கொழும்பு தாமரைத் தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

அதில் கலந்துகொண்டிருந்த உலக முஸ்லிம் லீக் அமைப்பின் செயலாளர் கலாநிதி ஷேக் மொஹமட் பின் அப்துல் கரீம் அல் ஈஸா வினால் 5 மில்லியன் ரூபா கொடையாக வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படிருந்தது. 

குறித்த நன்கொடையானது, ஈஸ்டர் தாக்குதலில் மரணித்தவர்களின் உறவினர்களுக்கு மற்றும் தாக்குதலில் காயமடைந்து அங்கவீனமுற்றிருப்பவர்களுக்கு வழங்குவதற்காக வழங்கப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள், ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

என்றாலும் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 92 கோடி ரூபா ஈஸ்டர் தாக்குதலில் மரணித்தவர்களின் உறவினர்களுக்கு மற்றும் தாக்குதலில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் நலநோம்புகளுக்காக கிடைக்கப் பெறவில்லை. 

அதனால் உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்ட குறித்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது. அது தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காதினல் மெல்கம் ரன்சித் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment