மர்ம கொலையாளியின் 50 ஆண்டு பெரும் புதிருக்கு விடை தெரிந்தது - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

மர்ம கொலையாளியின் 50 ஆண்டு பெரும் புதிருக்கு விடை தெரிந்தது

சோடியக் என்று தன்னை அழைத்துக் கொண்டு தொடர் கொலைகளைச் செய்த மர்ம நபர் அமெரிக்க பொலிஸாருக்கு அனுப்பிய புதிருக்கு 50 ஆண்டுகளுக்குப் பின் அர்த்தம் கிடைத்துள்ளது.

சோடியக் கொலையாளி என்று அழைக்கப்பட்ட அந்த மர்ம நபர் பொலிஸாரிடம் இதுவரை பிடிபடவில்லை. 1968 முதல் 1969 வரை 7 பேரை அவர் கத்தியால் குத்தினார் அல்லது துப்பாக்கியால் சுட்டார். அவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

அப்போது சோடியக் வழக்கு எனப்படும் இந்தத் தொடர் கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

கொலைகள் நடந்த காலக்கட்டத்தில் மர்ம நபர் சான் பிரான்சிஸ்கோவின் கிரோனிகல் நாளிதழுக்குத் திடுக்கிடச் செய்யும் கடிதங்களை அனுப்பினார்.

அவற்றில் ஒரு சில கடிதங்கள் புதிர் வடிவில் இருந்தன. அவற்றில் ஒன்று 340 எழுத்துகளைக் கொண்ட புதிர் பிரபலமானது.

உலகப் புகழ் பெற்ற கொலைகளைப் போலவே, அந்தப் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியில் பல ஆர்வலர்கள் இறங்கினர்.

இறுதியாகப் புதிருக்குப் பின் உள்ள தகவலைக் கடந்த வாரம் கண்டறிந்தனர் டேவிட், சாம், ஜார்ல் என்ற மூவர்.

“என்னைப் பிடிப்பதில் நிறைய வேடிக்கை காண்கிறீர்கள் என நம்புகிறேன்.

மரணத்திற்கு நான் பயப்படவில்லை, எனக்கு வேலை செய்யப் போதுமான அடிமைகள் உள்ளனர்” என்ற தகவலைக் கொண்டிருந்தது அந்தப் புதிர்.

புதிரில் கிடைத்த தகவல் பெரிதாக எந்தத் தடயத்தையும் கொடுக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

சான் பிரான்சிஸ்கோ பொலிஸார் புதிருக்கு அர்த்தம் காணப்பட்டதை உறுதி செய்தது. கொலைகள் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் அது கூறியது.

No comments:

Post a Comment