24 மணி நேரத்தில் சுமார் 7 லட்சம் பேருக்கு தொற்று, 14 ஆயிரம் பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

24 மணி நேரத்தில் சுமார் 7 லட்சம் பேருக்கு தொற்று, 14 ஆயிரம் பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சத்தை கடந்துள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 லட்சத்து 95 ஆயிரத்து 600 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 533 பேருக்கும், பிரேசிலில் 55 ஆயிரத்து 853 பேருக்கும், இங்கிலாந்தில் 50 ஆயிரத்து 23 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 550 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 8 கோடியே 30 லட்சத்து 22 ஆயிரத்து 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து 426 பேரும், பிரேசிலில் 1 ஆயிரத்து 224 பேரும், மெக்சிகோவில் 990 பேரும், இங்கிலாந்தில் 981 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 286 பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 23 லட்சத்து 90 ஆயிரத்து 649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 378 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 18 லட்சத்து 10 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்
அமெரிக்கா - 2,01,93,974
இந்தியா - 1,02,44,853
பிரேசில் - 76,19,970
ரஷியா - 31,31,550
பிரான்ஸ் - 26,00,498

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 3,50,324
பிரேசில் - 1,93,940
இந்தியா - 1,48,439
மெக்சிகோ - 1,23,845
இத்தாலி - 73,604
இங்கிலாந்து - 72,548
பிரான்ஸ் - 64,381
ரஷியா - 56,426

No comments:

Post a Comment