மதுபோதையில் வாகனம் செலுத்திய 1398 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்காக மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 20ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட போக்கு வரத்து திட்டத்தின் கீழ் மதுபோதையில் வாகனம் செலுத்திய 1398 சாரதிகளை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 50 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 132 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன், 291 பேர் சாதாரண காயமடைந்துள்ளனர்.
இதுவரை 613 விபத்துகள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment