இன்று (02) காலை மாலியிலிருந்து 44 பேர், கட்டாரிலிருந்து 21 பேர், துபாயிலிருந்து 52 பேர், இந்தியாவிலிருந்து 70 பேர் இலங்கை திரும்பியுள்ளனர்.
இன்று (02) காலை UL 104 எனும் விமானம் மூலம் மாலைதீவின், மாலி நகரிலிருந்து 44 பேர், கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் 21 பேரும், அமீரகத்தின் துபாய் நகரிலிருந்து UL 226 எனும் விமானம் மூலம் 52 பேரும் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன், இந்தியாவிலிருந்து UL 102 எனும் விமானம் மூலம் 70 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை வந்தடைந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தற்போது வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும், 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,461 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நேற்றையதினம் (01) 7,463 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment