முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை மீறிய 1,652 பேர் இதுவரை கைது - News View

About Us

About Us

Breaking

Monday, December 21, 2020

முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை மீறிய 1,652 பேர் இதுவரை கைது

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 1,652 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு வடக்கு மற்றும் மத்திய கொழும்பு பகுதிகளில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும், நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் சில வீதி ஒழுங்குகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமன்றி நாடு பூராகவும் உள்ள அனைவருமே வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உரிய சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளில் முக்கிய விடயமாக காணப்படும் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்று (20.12.2020) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1,652 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் கிடைக்கப் பெற்று வருவதால் அனைவரும் அந்த ஒழுங்குவிதிகளை பின்பற்ற வேண்டும்.

தற்போது பண்டிகை காலம் என்பதினால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது மட்டுமல்ல, தங்களது பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

இதேவேளை வீதி விபத்துகளுக்கு இலக்காகாத வகையிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment