வைத்தியசாலைகளுக்கு 114 சிகிச்சை படுக்கைகளை வழங்கவுள்ள ரோட்டரி கிளப்..! - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

வைத்தியசாலைகளுக்கு 114 சிகிச்சை படுக்கைகளை வழங்கவுள்ள ரோட்டரி கிளப்..!

(செ.தேன்மொழி)

சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்காக ரோட்டரி கிளப்பினால் வழங்கப்படும் உதவிகளை வரவேற்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் தடுப்பு மற்றும் கொவிட் தொற்றை தடுப்பதற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை இலங்கை ரோட்டரி கிளப் மற்றும் அவுஸ்திரேலியா ப்லேமின்டன் ரோட்டரி கிளப் உறுப்பினர்களுக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கலந்துலையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்நாட்டு வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்காக 80 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சிகிச்சை படுக்கைகளை வழங்குவது தொடர்பில் ரோட்டரி கிளப் கருத்து தெரிவித்துள்ளது. அதற்கமைய 114 சிகிச்சை படுக்கைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையை முன்னேற்றுவது சுகாதார அமைச்சின் பொறுப்பாக இருந்தாலும் நாட்டு மக்களினதும் சுயாதீன அமைப்புகளினதும் ஒத்துழைப்பும் அவசியமாகும். 

வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தருணத்தில் ரோட்டரி கிளப்பினால் வழங்கப்பட்ட உதவிகளை வரவேற்பதுடன், கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் காலத்தில் முகங்கொடுக்க நேரிடும் சவால்களுக்கு சுகாதார துறையை முன்னேற்ற வேண்டும்.

இந்த செயற்பாடுகளுக்கு இலங்கையின் ரோட்டரி கிளப் மற்றும் அவுஸ்ரேலிய ரோட்டரி கிளப்பினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை வரவேற்பதுடன், இதற்கு முன்னர் போலியோ தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்காக ரோட்டரி கிளப்பினால் வழங்கப்பட்ட உதவிகளையும் இராஜாங்க அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment