கொழும்பு மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,140 - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

கொழும்பு மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,140

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான 402 பேர் இனங்காணப்பட்டுள்ளனர், இதனைத் தொர்ந்து மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்திருப்பதாக கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் பதிவாகிய மொத்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,140 ஆகும்.

மேலும் நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் 188 பேர் பதிவாகியுள்ளனர். இதுவரையில் கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6502 ஆகும்.

களுத்துறை மாவட்டத்தில் 106 பேரும் (அதில் 98 பேர் அட்டுளுகமயிலிருந்து) கண்டியிலிருந்து 27 பேரும், குருநாகலயிலிருந்து 24 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதேபோன்று இரத்தினபுரியிலிருந்து 52 பேரும், காலியிலிருந்து 6 பேரும், கேகாலையிலிருந்து 9 பேரும், புத்தளத்திலிருந்து 29 பேரும் நுவரெலியாவிலிருந்து 18 பேரும், அம்பாறையிலிருந்து 21 பேரும் கிளிநொச்சியில் இருந்து 6 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

முதற் தடவையாக ஒரேநாளில் 878 பேர் வைரசு தொற்றுக்குளானவர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களுள் 88 பேர் வதிவிடம் உறுதிப்படுத்தப்படாதவர்கள்.

No comments:

Post a Comment