கொட்டகலை பகுதியில் ஒன்றரை வயது சிசு உட்பட 07 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

கொட்டகலை பகுதியில் ஒன்றரை வயது சிசு உட்பட 07 பேருக்கு கொரோனா

ஒன்றரை வயது சிசு உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்தார்.

கடந்த 23 ஆம் திகதி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குற்பட்ட பகுதிகளில் 07 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை இன்று (26) மாலை வெளியாகியதிலிருந்து 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலவாகலை கூமூட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் சிசு உட்பட 35 வயதுடைய பெண் ஒருவர், 20 வயது இளைஞன் ஒருவருமாக மூவரும், தலவாகலை ஒலிரூட் தோட்டத்தில் 56 வயது ஆண் ஒருவரும், கொட்டகலை டிரைட்டன் கே.ஒ பிரிவில் 59 வயது பெண் ஒருவர், டிரைட்டன் டீ.டி பிரிவில் 20 வயது பெண் ஒருவர், டெரிகிளேயர் தோட்டத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவருமாக ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரப்பகுதியில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் மேற்குறிப்பிட்ட 07 தொற்றாளர்களும் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment