ஓட்டமாவடி கல்வி கோட்டத்தில் கல்விச் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் online வகுப்புக்களை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டார் சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

ஓட்டமாவடி கல்வி கோட்டத்தில் கல்விச் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் online வகுப்புக்களை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டார் சட்டத்தரணி ஹபீப் றிபான்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொவிட்-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளது.

இதனைக்கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக சட்டத்தரணி ஹபீப் றிபான் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளுடன் நேற்று (14.11.2020) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 

இதில் பிரதிக் கல்வி பணிப்பாளர் VT. அஜ்மீர், கோட்டக் கல்வி அதிகாரி MA. அஹ்சாப், ஆசிரிய ஆலோசகர் MBT. கான், ACCIS International Campusயின் நிறைவேற்று பணிப்பாளர் நிசார் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் அன்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேற்படி இந்த கலந்துரையாடலில் ஆரம்ப கட்டமாக நடைபெற இருக்கின்ற (க.பொ.த) சாதாரண தரப் பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வகுப்புக்கள் இணைய வழி (Online) மூலம் நடாத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வகுப்புகள் கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவகத்தின் கீழ் உள்ள பாடசாலை கா.பொ.த சாதரண தர மாணவர்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான வகுப்புக்கள் நாளை (16.11.2020) தொடக்கம் ACCIS INTERNATIONAL CAMPUS யை தளமாகக் கொண்டு நடைபெறவுள்ளதுடன் இது தொடர்பிலான தகவல்கள் பாடசாலை அதிபர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad