குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், ஷானி அபேசேகர IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து, ஷானி அபேசேகர மஹர சிறைச்சாலையிலிருந்து, கடந்த புதன்கிழமை (25) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.
சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து, வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து தற்போது IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment