ஹட்டன், காமினிபுரம் பகுதியில் திடீரென மின்னழுத்தம் அதிகரித்தமையினல் பெறுமதி மிக்க வீட்டு மின் பாவணை உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையான 220-230 வோல்ட் மின்சார அழுத்த விநியோகமானது திடீரென 252 வோல்டாக அதிகரித்தமையால் வீடுகளிலுள்ள தொலைகாட்சிப் பெட்டிகள், சமையல் உபகரணங்கள், மின் குமிழ்கள், உட்பட பல பெறுமதியான பொருட்கள் பழுதடைந்துள்ளன. இச்சம்பவம் இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹட்டன் மின்சார சபை பொறுப்பதிகாரி நிஹால் சமரகோனிடம் கேட்டபோது காமினிபுரம் பகுதியிலுள்ள மின் இணைப்புகள் மற்றும் மின்சார கம்பிகளை தாங்கும் தூன்கள் என்பன மிக பழமையானது எனவே தான் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகின்றது.
காமினிபுரம் பிரதேச குடியிருப்பாளர்கள் ஒத்துழையாமையால் அதனை திருத்தியமைக்க முடியாதுள்ளது எனினும் இது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தார்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)
No comments:
Post a Comment