கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக நஸ்மியா சனூஸ் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக நஸ்மியா சனூஸ் நியமனம்

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை வலயக் கல்வி நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் 3ஐ சேர்ந்தவரான சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எம்.எம். பதுருத்தீன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து இந் நியமனம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனால் இன்று (09) வழங்கப்பட்டது.

இவர் முன்னர் சாய்ந்ததமருது பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad