முஸ்லிம்களை அடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை, 100 ற்கும் மேற்பட்ட அழைப்புக்கள் வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

முஸ்லிம்களை அடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை, 100 ற்கும் மேற்பட்ட அழைப்புக்கள் வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தனக்கு வரும் 100 தொலைபேசி அழைப்புக்களில் 99 அழைப்புக்கள் முஸ்லிம்களைத் தகனம் செய்வதைத் தடுத்து நிறுத்தி அடக்கம் செய்ய அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தே வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் நியாயமான பிரச்சினையை நியாயமான முறையில் முன்வைக்கும்போது தமக்கு இனவாதிகள் என சாயம் பூசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் 189 நாடுகளில் அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கும் சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.

எனவே இது தொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அடக்கம் செய்வதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கோரிக்கை விடுப்பதினால் நாட்டின் தனிமைப படுத்தல் சட்டத்திற்கு சவலாக அமைந்து விடும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment