டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி - தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி - தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதற்காக தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. ஒக்ஸ்போர்ட் உட்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது.

அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு ஆகும். 

இதனால், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளும் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஃபிப்சர் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீதம் கொரோனாவை தடுக்கிறது என்ற தகவலையடுத்து அந்த தடுப்பூசியை வாங்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. 

மேலும், இந்த தடுப்பூசியை தங்கள் நாட்டில் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் தேவையான நடவடிக்கைகளை இங்கிலாந்து எடுத்து வருகிறது. 

இதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே தயார் நிலையில் இருக்கும் படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்ஹாக் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேட் ஹேன்ஹாக் கூறியதாவது கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக தேசிய சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளேன். 

கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக தேசிய சுகாதாரத்துறை ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும் டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே தயார் நிலையில் இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தடுப்பூசி தொடர்பான தகவல்களில் சில இடர்பாடுகள் உள்ளது. தடுப்பூசி தொடர்பான முழுமையான பாதுகாப்பு தரவுகளை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. அது மிகவும் முக்கியம். பரிசோதனையில் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என எங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் தடுப்பூசியை நாங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரமாட்டோம்.

ஆனாலும், தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்து உரிய அங்கீகாரம் பெற்று வரும்போது உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆகையால் இத்தகைய முன்னேற்பாடுகள் என்றார்.

No comments:

Post a Comment