மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிகமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிகமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிகமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் வைத்தியசாலை நிருவாகத்திடம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் தரித்திருப்பதற்கான தற்காலிக கூடாரங்களை மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக அவ்வைத்தியசாலை நிருவாகம் மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இது தொடர்பாக புதன்கிழமை 04.11.2020 இடம்பெற்ற கலந்துரையாடலில் மேலும் தெரிவித்த மாவட்டச் செயலாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன் வீதி ஒருவழிப் பாதையாக இருந்த போதும் அதிகளவான சன நெரிசல் காணப்படுகின்றது.

அத்துடன் வாகனங்கள் முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடமாக வைத்தியசாலையின் முன்பகுதி காணப்படுவது நோயாளர் பார்வையிடும் நேரங்களில் அதிகளவான சிரமத்தினை பொதுமக்களும் வைத்தியசாலை ஊழியர்களும் எதிர்நோக்குகின்றனர் இதனை நிவர்த்திக்க வேண்டும்.

ஏதிர்காலங்களில் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுமாயின் அதற்கான முன்னாயித்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அந்த வகையில் தனியார் வீடுகளில் தங்கியுள்ள வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு வீட்டுரிமையாளர்கள் வாடகை வீடு வழங்குவதில் அதிகளவு நாட்டம் காட்டுகின்றார்கள் இல்லை அதற்கு அரசாங்க விடுதிகளை தயாராக்கி வைப்பதற்கு மாவட்ட செயலகம் ஆயித்தமாகவுள்ளது.

வைத்தியசாலை வேலைக்கு வருகின்ற வெளிமாவட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரத்தியேக பஸ் சேவையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை இணக்கம் தெரிவித்துள்ளது.” என்றார்.

No comments:

Post a Comment