பொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

பொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை - சாகர காரியவசம்

ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்களை தடை செய்வது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை இது குறித்து ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு எதிராக அவதூறு சுமத்தும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படாத பல இணையத்தளங்கள் சேற்றைவாரியிறைக்கும் தகவல்களை வெளியிடுகின்றன என்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எந்த உத்தியோகபூர்வ வழிமுறைகளிலும் பதிவு செய்யப்படாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கம் கருதுகின்றது என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment