ஷானி அபேசேகரவை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு : மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

ஷானி அபேசேகரவை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு : மங்கள சமரவீர

(நா.தனுஜா)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கிரித்தலேயில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையானவையா என்று கேள்வி எழுப்பியிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அவருடைய சுகாதார நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஷானி அபேசேகர தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது 'கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கிரித்தலேயில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையானவையா? அவருடைய சுகாதாரநலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

No comments:

Post a Comment