பண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Monday, November 23, 2020

பண்டாரவளையில் ஒருவருக்கு கொரோனா - மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

பண்டாரவளை - ஹெத்தளைபிட்டியவில் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அரச ஒளடத கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிலையில் வீடு திரும்பியவர் என ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த 20 ஆம் திகதி பண்டாரவளை நகரில் உள்ள சிகையலங்காரம் நிலையத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் ஹப்புத்தளை - பலகல பகுதியில் உள்ள தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பண்டாரவளை நகரில் உள்ள குறித்த சிகையலங்கார நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர அந்த சிகையலங்கார நிலையத்திற்கு 20 ஆம் திகதிக்கு பின்னர் சென்றவர்கள் தொடர்பிலும் தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும் ஹப்புத்தளை பொதுச் சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad