மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு, காலை ஆகாரமே பிரதானம் என்கிறது சுகாதார அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு, காலை ஆகாரமே பிரதானம் என்கிறது சுகாதார அமைச்சு

பாடசாலை மாணவர்களில் 60-70 சதவீதமானோரின் நோயெதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையிலுள்ளதாகவும் இதனால் மாணவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் சுகாதார அமைச்சுடன் இணைந்த முதன்மை பராமரிப்பு சேவைகளின் இயக்குநர் பிரியந்த அத்தப்பத்து தெரிவித்தார்.

இன்று ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், மாணவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பரிசிச் சோறு, பச்சை இலை வகைகள், காய்கறிகள் மற்றும் மீன் அடங்கிய உணவை காலையில் உண்பது அவசியம் என்றார்.

புதிய பழங்கள், விற்றமின் டி,சி,ஏ அடங்கிய உணவு மற்றும் காலை 7.00 மணி முதல் 10.00 மணிக்கு இடையிலான சூரிய ஒளியைப் பெறுதலும் பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர் அத்தப்பத்து மேலும் கூறினார்.

மேலும் பயறு, கௌபி, வற்றாளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளை மாணவர்கள் உட்கொள்வதும் சுத்தமான நீரைப் பருகுதலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment