புத்தளம் நகரிலுள்ள கொழும்பு முகத்திடல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், புத்தளம் நகரிலுள்ள பொதுமக்கள் மாத்திரமின்றி, வெளியூர் மக்களும் ஒன்றுகூடும் ஒரு தளமாக காணப்படும் கொழும்பு முகத்திடலை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், புத்தளம் பாத்திமா கல்லூரி வீதியில் நிண்ட காலமாக இடம்பெற்றுவந்த வாராந்த சந்தையும் வியாபாரிகளுக்கிடையிலான தூரம், பொதுமக்களின் இட நெரிசல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தற்காலிகமாக புத்தளம் பொலிஸ் வீதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
எனவே, அவசியத் தேவையின்றி, மக்கள் வெளியே செல்வதையும், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு வெளியே சுற்றித் திரிவதையும் தவிர்த்துக்கொள்றுளுமாறும் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் மேலும் கூறினார்.
புத்தளம் நிருபர் ரஸ்மின்
No comments:
Post a Comment