மட்டக்களப்பு - கொழும்பு புகையிர சேவைகள் இரத்து - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

மட்டக்களப்பு - கொழும்பு புகையிர சேவைகள் இரத்து

மட்டக்களப்பு கொழும்புக்கு இடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு கொழும்புக்கு இடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவித்தார்.

தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று புகையிரத சேவைகளும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு மூன்று புகையிரத சேவைகளும் மட்டக்களப்பிலிருந்து மாகோவிற்கு இரு சேவைகளும் இடம்பெற்று வந்தன.

தற்போதைய சூழ்நிலைகளினால் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு புகையிரத நிலையம் தற்போது பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment