கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்து ஆராய விசேட குழு நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்து ஆராய விசேட குழு நியமனம்

(இராஜதுரை ஹஷான்) 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய நால்வர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இணையவழியூடாக இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறினார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன. துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய நால்வர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு முனையம் அபிவிருத்தி, வரவு செலவு, அபிவிருத்திக்காக பிற நிறுவனங்களுக்கு வழங்குவதா அல்லது உள்ளூர் மட்டத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது குறித்து ஆராய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad