யாருடைய அரசாங்கம் தோல்வி என்பதை நன்கு அறிந்தே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் - கெஹேலிய ரம்புக்வெல - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

யாருடைய அரசாங்கம் தோல்வி என்பதை நன்கு அறிந்தே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் - கெஹேலிய ரம்புக்வெல

(இராஜதுரை ஹஷான்)

யாருடைய தலைமையிலான அரசாங்கம் தோல்வி என்பதை நன்கு அறிந்தே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். கடந்த அரசாங்கத்தை விமர்சித்து அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை இணையவழியூடாக இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கமும் ஜனாதிபதியும் தோல்வி என்று எதிர்த்தரப்பினர் அரசியல் பிரசாரம் செய்து கொள்கிறார்கள். எவர் தலைமையிலான அரசாங்கம் தோல்வி என்பதை அறிந்தே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தற்போதைய எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருக்கும்போது, 2005 தொடக்கம் 2015 வரையிலான அரசாங்கத்தை விமர்சிப்பதில் அதிக அக்கறை காட்டினார்கள். இதனால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்து அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad