போலியான குற்றச்சாட்டுக்களை முன்னைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் - சாகர காரியவசம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

போலியான குற்றச்சாட்டுக்களை முன்னைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்) 

போலியான குற்றச்சாட்டுக்களை முன்னைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பலதரப்பட்ட நடவடிக்கைகளை செயற்படுத்தியுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் மாதிரிகளை பரிசோதனை செய்யும் இயந்திரத்தை அரசாங்கம் எவ்வித விலை மனுகோரலுமின்றி கொள்வனவு செய்துள்ளதாக எதிர்த்தரப்பினர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். 

கொவிட்-19 வைரஸ் மாதிரிகளை கண்டறியும் சாதனம் ஏதும் கொள்வனவு செய்யவில்லை, அதற்கு விலை மனுகோரலும் விடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

போலியான குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு எதிர்த்தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றனர். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை சிறந்த திட்டமிடல் ஊடாக வெற்றி கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad