செல்வம் அடைக்கலநாதனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

செல்வம் அடைக்கலநாதனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நாளை (23) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளை இன்றைய தினம் (23) திங்கட்கிழமை மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 106 (1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இலக்க வழக்குத் தொடர்பாக தாங்கள் நாளை (24) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தின் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளை அழைப்பாணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment