போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த

(இராஜதுரை ஹஷான்) 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நெருக்கடியான சூழ்நிலையிலும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்குல் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா, பொதுஜன பெரமுன அரசாங்கமா அல்லது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கமா என தெரியாது. உலக வல்லரசு நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு கொவிட்-19 வைரஸ் தாக்கம் பிரதான காரணியாக இருந்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நெருக்கடியான சூழ்நிலையிலும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. நெருக்கடியான நிலையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் எதிர்த்தரப்பினர் குறைபாடுகளை மாத்திரம் காண்கிறார்கள். எவ்வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வெகுவிரைவில் தற்போதைய நெருக்கடி நிலையினை வெற்றி கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad