கொழும்பு தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவில் ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு நகராட்சியிலிருந்து பதிவான அனைத்து கொரோனா நோயாளர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் பதிவான ஆயிரத்து 767 கொரோனா நோயாளர்களில் ஆயிரத்து 635 பேர் மினுவங்கொடை மற்றும் பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment