திருகோணமலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
30 வயதான அவர், விடுமுறைக்காக கொழும்பு, கொட்டாஞ்சேனையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று, கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலை திரும்பிய நிலையில், ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் 05ஆம் 06ஆம் வார்டுகளில் கடமையாற்றியவர் எனவும் தெரியவருகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த வைத்தியரை IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவருடன் பணியாற்றிய மேலும் 3 வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
No comments:
Post a Comment