பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

கொழும்பு, பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 10 பேரில் 8 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்கள் களுத்துறையில் அமைந்துள்ள கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.

அதனடிப்படையில் பொரளை பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தலில் உள்ள 125 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment