மன்னாரில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

மன்னாரில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மாற்றம் காரணமாக மழை நீடிக்கும் என, வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மழை தொடரும் பட்சத்தில் மன்னாரில் தாழ்நிலக் கிராமங்கள் சில வெள்ளத்தில் மூழ்கும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர்,எமில் நகர் போன்ற கிராமங்களும் நானாட்டான் பகுதியில் மடுக்கரை, அருவி ஆற்று பகுதி போன்ற பகுதிகளும் மடு பிரதேசத்தில் தம்பன்னைக்குளம், முள்ளிக்குளம், பண்டிவிருச்சான், தச்சனா மருதமடு போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மன்னார் பிரதேச செயலக பிரிவில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாத வகையில் வாய்க்கால்கள் மற்றும் குளங்களும், பிரதேச செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட பொறியியலாளர் சம்மேளனத்தினால் ஆழப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)

No comments:

Post a Comment

Post Bottom Ad