திருகோணமலையில் உணவுக்காக அலைந்து திரியும் மான் கூட்டங்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

திருகோணமலையில் உணவுக்காக அலைந்து திரியும் மான் கூட்டங்கள்

திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் மான் கூட்டங்கள் உணவுக்காக அழைந்து திரிந்து வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக உள்ள இந்த மான் கூட்டங்கள் உணவுகள் இன்றி வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் சுற்றித் திரிக்கின்றன.

அதேபோன்று உணவுக்காக திருகோணமலை சிறைச்சாலையை அண்டிய பகுதியில் மான் கூட்டங்கள் பொலித்தீன் உறைகள் மற்றும் கழிவுகளையும் உண்டு வருகின்றன.

திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியிலேயே அதிகளவான மான்கள் காணப்படுகின்றன. 
மான்களுக்கான சிறந்த பராமரிப்புகள் மற்றும் உணவுகள் இன்மையால் வீதியை கடக்க முற்படுகின்ற போதும் அதேபோன்று பொலித்தீன் பைகளை உண்ணுகின்ற மான்களும் என வருடத்திற்கு சராசரியாக பத்துக்கும் மேற்பட்ட மான்கள் இறந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா காலமாகையால் அவற்றுக்கு உணவளிப்பதில் பல சிக்கல் நிலையுள்ளதால் மான்கள் உணவு தேடி அலைந்து திரிவதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை நகர சபையினால் மான்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad