தனிமைப்படுத்தல் பிதேசங்களில் இறுக்கமான வழிகாட்டல்களின் கீழ் சேவைகளை முன்னெடுக்க முடியும் - News View

Breaking

Post Top Ad

Saturday, November 14, 2020

தனிமைப்படுத்தல் பிதேசங்களில் இறுக்கமான வழிகாட்டல்களின் கீழ் சேவைகளை முன்னெடுக்க முடியும்

தனிமைப்படுத்தல் பிதேசங்களில் உள்ள அத்தியாவசிய அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை, சுகாதார அலுவலர்களின்‌ கடுமையான கண்காணிப்பு மற்றும்‌ வழிகாட்டல்களின் கீழ்‌ முன்னெடுக்க முடியுமென,‌ கொவிட்‌ 19 பரவலைத் தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையம்‌ அறிவித்துள்ளது.

நாளை‌ (16) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களான மருதானை பொலிஸ்‌ பிரிவு, கோட்டை பொலிஸ்‌ பிரிவு, புறக்கோட்டை பொலிஸ்‌ பிரிவு, கொம்பனித்தெரு பொலிஸ்‌ பிரிவு, டாம்‌ வீதி (அணைக்கட்டு வீதி) ஆகிய பொலிஸ்‌ பிரிவுகளில்‌ அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபை (BOI), ஏற்றுமதி அபிவிருத்திச்‌ சபை (EDB) நீதிமன்றங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை, சுகாதார அதிகரிகளின்‌ கடுமையான கண்காணிப்பு மற்றும்‌ வழிகாட்டல்களின் கீழ்‌ முன்னெடுக்க முடியும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad