மாவீரர் தினம், பிரபாகரனின் பிறந்த தினம் தொடர்பான தகவல்களை முகநூலில் பதிவிட்டவர்களுக்கு விளக்கமறியல் - News View

About Us

Add+Banner

Monday, November 30, 2020

demo-image

மாவீரர் தினம், பிரபாகரனின் பிறந்த தினம் தொடர்பான தகவல்களை முகநூலில் பதிவிட்டவர்களுக்கு விளக்கமறியல்

0ede83921831a5b3acef9c6f9e47b3d5_XL-1ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

எல்ரீரீஈ இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுதல், மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான தகல்வல்களை முகநூலில் வெளியிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (26.11.2020) மாலை கைது செய்யப்படட சந்தேக நபர்கள் நீதிமன்ற அனுமதியின் கீழ் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 29.11.2020 மாவட்ட பதில் நீதிவான் வி. தியாகேஸ்வரன் முன்னிலையில் சற்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவ்வேளையிலேயே சந்தேக நபர்களை டிசம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சித்தாண்டி, வந்தாறுமூலை கொம்மாதுறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *