மீன்பிடிப் படகொன்றில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி மீனவர்களையும் படகையும் மீட்ட கடற்படையினர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

மீன்பிடிப் படகொன்றில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி மீனவர்களையும் படகையும் மீட்ட கடற்படையினர்

தெற்கு கடல் பகுதியில் மீன்பிடிப் படகொன்றில் பல நாட்கள் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கடற்படையினர் சனிக்கிழமை குறித்த மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்களையும் பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு அழத்து வந்துள்ளனர்.

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தை விட்டு வெளியேறிய ‘ஜனத் I’ (IMUL-A-0545-GLE) என்ற மீன்பிடிப் படகு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தவேளை, கொக்கலை கடல் பகுதியில் வைத்த அதன் இயந்திர அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர கண்காணிப்பு ரோந்து படகு மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தை அவதானித்துள்ளது.

அதன்படி, கடலோர கண்காணிப்பு ரோந்து படகு மீன்பிடி படகில் பல நாட்கள் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தீயை அணைக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க காலி துறைமுகத்திலிருந்து ஒரு துரித தாக்குதல் படகொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, துரித தாக்குதல் படகு மற்றும் கடலோர பாதுகாப்பு படகு ஆகியவற்றின் கடற்படை வீரர்களினால் இந்த தீயை வெற்றிகரமாக அணைக்க முடிந்தது.

மேலும், இச்சம்பவத்தில் மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் காயமடையவில்லை. இந்நிலையில், மீனவர்களும், படகும் கடற்படை மூலம் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.

மேலும், கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment