ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்படுகின்றார் டயனா கமகே - சட்டபூர்வமான அறிவித்தலை அனுப்பினார் சஜித் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்படுகின்றார் டயனா கமகே - சட்டபூர்வமான அறிவித்தலை அனுப்பினார் சஜித்

(செ.தேன்மொழி) 

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை தனது கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டயனா கமகேவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர் அதில் கூறியுள்ளதாவது, ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கத்திலும், சர்வாதிகாரத்தை இல்லாதொழிப்பதற்காகவும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருந்தது.

எமது இந்த தீர்மானம் தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்முடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளுக்கும் தெரிவத்திருந்தார். அதற்கமைய அவர்களும் அந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புகள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது, எமது கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள நீங்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தீர்கள்.

இதன் காரணமாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளரின் உத்தரவுக்கு புறம்பாகவும், கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாகவும் செயற்பட்டதன் காரணமாக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்சியின் நட்பெயரை பாதுகாத்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியில் கொண்டுள்ள உறுப்புரிமையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம். 

கட்சியின் யாப்பின் உள்ளடக்கப்பட்டுள்ள 15 ஆவது இலக்க 1 ஆவது சரத்திற்கமைய, கட்சின் தலைவரான எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் உடன் அமுலுக்கு வரும் வகையில், உங்களை கட்சியலிருந்து விலக்க தீர்மானித்துள்ளோம்.

இந்த சரத்தின் பிரகாரம் கட்சியின் நற்பெயருக்கு தீங்கை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள அமைப்பு போன்று கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

இந்நிலையில் கட்சியிலிருந்து உங்களது உறுப்புரிமையை நீக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு தெரிவித்ததுடன், செயற்குழு உங்களுக்கு எதிராக அனைத்து ஒழுங்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad