வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நிவர் புயல் நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மைய பணிப்பாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நிவர் புயல் 25ஆம் திகதி பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் வரும் 24, 25 திகதிகளில் சில ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை - திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கான ரயில் சேவை, தஞ்சை - சென்னை, சென்னை - தஞ்சை, திருச்சி - சென்னை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment