ஆப்கானிஸ்தானில் பக்தியா மாகாணத்தில் நடந்த கார் வெடி குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பக்தியா மாகாணம், ரொகானா பாபா மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் வெடி குண்டு தாக்குதல் நடத்தபட்டது.
சோதனைச்சாவடியில் வெடி குண்டு வெடித்து சிதறியதில் 15 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் பலத்த காயமடைந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதேபோல் காபூலின் கவாஜா சப்ஸ் போஷ் பகுதியில் குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒரு வீரர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment