தேர்தலில் நான் வெற்றி பெற்று விட்டேன் - ட்ரம்ப் அதிரடி டுவீட் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

தேர்தலில் நான் வெற்றி பெற்று விட்டேன் - ட்ரம்ப் அதிரடி டுவீட்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக ஜனாதிபதி ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தனது தோல்வியை ஏற்க ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ஜோ பைடனின் வெற்றி என்பது மோசடியான ஒன்று என தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். ட்ரம்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேரணி நடத்தி வருகின்றனர். 

இதனால், ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் பைடன் ஆதரவாளர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களுக்கும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், தேர்தலில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ என தெரிவித்துள்ளார். 

ஆனால், ட்ரம்பின் பதிவை போலியான தகவல் என்று கூறும் வகையில் அந்த பதிவை மேற்கொள் காட்டி ட்விட்டர் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், ‘அதிகாரப்பூர்வ தகவல்கள் இந்த தேர்தல் முடிவுகளை வேறு விதமாக கூறுகிறது’ என ட்விட்டர் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad