வடக்கு இளைஞர்களும் என்னைப்போல் அரசியலுக்கு வர வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

வடக்கு இளைஞர்களும் என்னைப்போல் அரசியலுக்கு வர வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச

என்னைப்போல் வட பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட தலைமை காரியாலயத்தினை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

தொடர்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த 30 வருட காலமாக நடந்த யுத்தத்தின் தாக்கத்தின் காரணமாக வடபகுதி அபிவிருத்தி அடையாத நிலை காணப்பட்டது எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போது நாட்டில் சுதந்திரம் நிலவி வருகின்றது.

எனினும் தற்போதைய அரசாங்கம் வடபகுதியில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அதிலும் குறிப்பாக விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உதைபந்தாட்டம், கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு மைதானங்கள் இந்த அரசாங்கத்தை அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன அதே போன்று சர்வதேச ரீதியில் விளையாடுவதற்காக வடக்கிலிருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது எமது ஆர்வம்.

எனவே கடந்த 30 வருட காலமாக இருந்த நிலையை மறந்து நாம் அனைவரும் புதிய யுகம் நோக்கி பயணிப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad