பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை கடமைக்கு அழைக்க சுகாதார அமைச்சின் அனுமதி வேண்டும் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை கடமைக்கு அழைக்க சுகாதார அமைச்சின் அனுமதி வேண்டும்

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு சுகாதார அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “கொவிட் வைரசு தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட பல பிரதேசங்களில் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த பிரதேசங்களில் அல்லது இந்த பிரதேசங்களிலிருந்து வெளியிடங்களுக்கு பொதுமக்களின் பயணங்களுக்கு கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக அவசியம் தேவையான ஊழியர்களை மாத்திரம் மேலே குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து அழைக்க முடியாமை பிரச்சினையாக அமைந்துள்ளது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக நாட்டின் ஏதேனும் பிரதேசங்களில் இருந்து அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊழியர்களை அழைப்பது அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் அது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்து அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு அமைவாக அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறுப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad