களுத்துறை பஸ்துன்ரட கல்வியியல் கல்லூரி மற்றும் அளுத்கம தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி கொராேனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மத்திய நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய இரண்டு மத்திய நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொராேனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் புதிய மத்திய நிலையங்களாக களுத்துறை பஸ்துன்ரட கல்வியல் கல்லூரி மற்றும் அளுத்கம தர்கா நகர் தேசிய கல்வியல் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளும் தெரிவு செய்யப்பட்டு, அவற்றுக்கு தேவையான சிகிச்சை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதன் பிரகாரம் பஸ்துன்ரட கல்வியியல் கல்லூரியில் 400 கட்டில்கள் அளுத்கம தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரியில் 200 கட்டில்கள் உள்ளடங்கிய தேவையான அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு சிகிச்சை அளிப்பதற்காக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலை, பேருவள, அளுத்கம மற்றும் தர்கா நகர் வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாற் தொகுதியினர் புதிய சிகிச்சை மத்திய நிலையங்களில் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
அத்துடன் சிகிச்சை மத்திய நிலையத்துக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு என்பன இராணுவத்தினரால் மேற்காெள்ளப்படுகின்றன.
மேலும் களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய பிபுர, பண்டாரகம, மத்துகம மற்றும் இத்தேபான ஆகிய வைத்தியசாலைகளில் சுமார் 300 கொராேனா தொற்றாளர்கள் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் களுத்துறை பொலிஸ் பயிற்சி வித்தியாலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றார்.

No comments:
Post a Comment