(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்த்தரப்பினர் பெயரளவில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். நெருக்கடியான சூழ்நிலையை அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தையும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நெருக்கடியான சூழ்நிலையில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்த்தரப்பினர் பெயரளவில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். நடைமுறையில் எவ்விதமான ஒத்துழைப்பும் இதுவரை காலமும் எதிர்த்தரப்பினர் வழங்கவில்லை.
நெருக்கடியான சூழ்நிலையினை அரசியல் தேவைக்கு சாதகமாக்கிக் கொள்வதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்த்தரப்பினரது ஆதரவு இல்லாமல் தற்போதைய நெருக்கடியான சூழலை வெற்றி கொள்ள முடியும். தனித்து செயற்படவே மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள் என்றார்.

No comments:
Post a Comment