கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக் கொலை! - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பளை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் பழங்கள் வேண்டி விட்டு வாள் வெட்டுக்கு இலக்கான நபர் தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டு வீதியினூடாக மாமுனை நோக்கி பயணித்த வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் மாமுனை பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் என்னும் 40 வயதுடைய நபர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி நிருபர் நிபோஜன்

No comments:

Post a Comment

Post Bottom Ad