அரசியல் தரப்பினரது ஆலோசனைகளை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டடிய அவசியம் கிடையாது - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

அரசியல் தரப்பினரது ஆலோசனைகளை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டடிய அவசியம் கிடையாது - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய தீர்மானத்தை எடுக்கும். எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலகளாவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதார வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் தரப்பினரது ஆலோசனைகளை கொண்டு கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

சுகாதார சேவையாளர்களின் ஆலோசனைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் நோக்கத்தை கொண்டு எதிர்த்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment