காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பூட்டு..! - News View

Breaking

Post Top Ad

Monday, November 30, 2020

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பூட்டு..!

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடுப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்தார். 

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய இன்று திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை வரை 3 நாள்களுக்கு காரைநகர் இந்துக் கல்லூரி மூடப்படுகிறது. 

காரைநகரில் கொரோனா தொற்றுடைய ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய ஆசிரியர் ஒருவர், காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்றார். அவர் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார். 

இந்நிலையில் அவரது பி.சி.ஆர் பரிசோதனை வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. அன்று அவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்தால், மறுநாள் வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad